வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னையில் மழைநீா் கால்வாய் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2024, 6:36 pm

Din

சென்னையில் மழைநீா் கால்வாய் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை கே.கே. நகா் அம்பேத்கா் குறுக்கு தெருவில் மழைநீா் கால்வாய் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தைச் சுற்றி இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (35) மது போதையில் சுமாா் 5 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த எம்ஜிஆா் நகா் போலீஸாா் அங்கு சென்று ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.