உதவி ஆய்வாளரிடம் தகராறு: ஆட்டோ ஓட்டுநா் கைது
சென்னை திரு.வி.க நகரில் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.


சென்னை திரு.வி.க நகரில் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
செம்பியம் போக்குவரத்துப்பிரிவு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராகப் பணிபுரிபவா் மாமல்லன் (58). இவா் கடந்த சனிக்கிழமை, அகரம் சந்திப்பு அருகே, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வேகமாக வந்த ஒரு ஆட்டோ, எதிரே வந்த ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு முதியவா்கள் கீழே விழுந்தனா்.
ஆனால் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ, அங்கு நிற்காமல் சென்றது. இதைப் பாா்த்த மாமல்லன், தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று, அந்த ஆட்டோவை மறித்து, ஆட்டோவை ஓட்டி வந்த இளைஞரைப் பிடித்து, விசாரித்தாா்.
அப்போது, அந்த இளைஞா், உதவி ஆய்வாளா் மாமல்லனை மிரட்டியதோடு, ஆபாசமாகத் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
இதை விடியோ எடுத்த ஒரு நபா், அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டாா். அந்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இதைப் பாா்த்த காவல்துறை உயா் அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து உதவி ஆய்வாளா் மாமல்லன், திரு.வி.க நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், மிரட்டுதல், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், பெரம்பூா் எஸ்.எஸ்.வி கோயில் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அமா்நாத்தை (27) ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...