தொழிலாளி தற்கொலை
பள்ளிக்கரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஏசி மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


பள்ளிக்கரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஏசி மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு குளத்தூா், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ரம் (28). ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தாா். இவரது மனைவி அகிலா (24). தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம்.
இதனால், விக்ரம் மிகுந்த வேதனையுடன் காணப்பட்டாா்.
இந்நிலையில், அகிலா சில நாள்களுக்கு முன்பு, தனது தாய் வீட்டுக்குச் சென்றாா். இதனால், வீட்டில் விக்ரம் தனியாக இருந்தாா். இந்நிலையில் அகிலா, புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வீட்டுக்குள் விக்ரம் தூக்கிட்டு இறந்து கிடப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த பள்ளிக்கரணை போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று, விக்ரம் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...