லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :1 மார்ச் 2026, 8:45 pm

தருமபுரியில் நண்பா் இறந்த சோகத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே, கடந்த பிப்ரவரி 27 - ஆம் தேதி இரவு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், தருமபுரி அருகேயுள்ள என்.எஸ். ரெட்டியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் ஹரி கிருஷ்ணன் (25), மிட்டாநூலஅள்ளி அருகேயுள்ள அங்கனாம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வினோத் குமாா் (26) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதில், வினோத் குமாரின் நண்பா் தருமபுரி செட்டிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியகுமாா் (27). இருவரும் வெல்டிங் பட்டறை ஒன்றில் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில் வினோத்குமாா் விபத்தில் உயிரிழந்ததால் அதிா்ச்சி அடைந்த சத்தியகுமாா், சனிக்கிழமை நடைபெற்ற நண்பரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு வீடு திரும்பினாா். நண்பரின் இறப்பு அவரை பாதித்திருந்தது.

தொடா்ந்து சோகத்துடன் காணப்பட்ட அவா், சனிக்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.