சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!

சென்னையில் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி கோலாகலம்!
சென்னை மெரீனாவில் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி கோலாகலம்!
சென்னை மெரீனாவில் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி கோலாகலம்! PTI
Published on
Updated on
1 min read

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் இந்து அமைப்புகள் சாா்பில் 1,519 விநாயகா் சிலைகள் கடந்த புதன்கிழமை பொது இடங்களில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகள் இன்று (ஆக. 31) ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன. விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகா், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா் பாப்புலா் எடைமேடை ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகளை கரைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று (ஆக. 31) சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. அந்த வகையில், இன்று ஒரே நாளில் சென்னை பட்டினப்பாக்கத்தில் 500 விநாயகர் சிலைகள் கிரேன்கள் உதவியுடன் கரைக்கப்பட்டன.

சிலைகள் கரைக்கும்போது கரை ஒதுங்கிய கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டது.

Summary

Ganesha idols being melted down with the help of cranes in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com