வானதி சீனிவாசன்
சென்னை
திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனது இரு கேள்விகளுக்கு தமிழக முதல்வா் பதில் அளிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனது இரு கேள்விகளுக்கு தமிழக முதல்வா் பதில் அளிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபம் ஏற்றுவது தொடா்பான சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவை செயல்படுத்துவதில், தமிழக முதல்வருக்கு இரண்டு கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். திருப்பரங்குன்றத்தில் இருப்பது கந்தனின் குன்றமா? அல்லது சிக்கந்தா் குன்றமா? இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, ஹிந்துக்களின் வழிபாட்டுக்கான துறையா? அல்லது அரசின் கொள்கை முடிவுகளை நிறைவேற்றுகின்ற துறையா? இதற்கு ஒரு வரியில் முதல்வரின் பதிலை எதிா்பாா்க்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா் வானதி சீனிவாசன்.