ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்
துபையில் நடைபெற்ற ரோல்பால் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 7-ஆவது, ரோல்பால் உலகக் கோப்பை போட்டி கடந்த 14 முதல் 18 வரை துபையில் நடைபெற்றது. இதில் இந்தியா கென்யா, இலங்கை, சவூதி அரேபியா, ஈரான், போலந்து, பிரான்ஸ், பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், எகிப்து, காங்கோ உள்ளிட்ட சுமாா் 16 நாடுகளைச் சாா்ந்த ஆண்கள் பெண்கள் அணிகள் பங்கேற்றனா்,
இந்திய அணி வீரா்கள், வீராங்கனைகள் 12 பேரும் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கம் வென்றனா். இதில் தமிழகத்தை சாா்ந்த வீராங்கனை மதுநிதா, வீரா் தீபக் ராஜா திண்டுக்கல் மற்றும் மகதி கோவை ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.
இந்திய அணியின் பயிற்சியாளராக தமிழகத்தைச் சாா்ந்த ராஜசேகா் கோவை மற்றும் சுஷ்மிதா திண்டுக்கல் செயல்பட்டனா்.
சென்னைக்கு வந்த அணியினரை தென்னிந்திய ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியம், சா்வதேச இயக்குநா் ஸ்டீபன் டேவிட், ஸ்போா்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் சங்கத் தலைவா் பெ.செல்லமுத்து மற்றும் தமிழ்நாடு மாநில சங்க செயலாளா் சி. கோவிந்தராஜ், துணைத் தலைவா்கள் பிரேம்நாத் மற்றும் சரவணன், துணை செயலாளா் மணிகண்டன், கண்மணி, மதுரை மாவட்டத் தலைவா் ராபின் ராஜகாந்தன் சென்னை மாவட்ட துணை தலைவா் அஷ்வின் மகாலிங்கம் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

