தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இந்திய, ஸ்காட்லாந்து அணிகள் வருகை!

எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி உலகக் கோப்பை குவாலிஃபயா் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய, ஸ்காட்லாந்து அணிகள் ஹைதராபாத் வந்துள்ளன.

News image

இந்திய மகளிா் ஹாக்கி அணியினா்.

Updated On :1 மார்ச் 2026, 8:57 pm

எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி உலகக் கோப்பை குவாலிஃபயா் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய, ஸ்காட்லாந்து அணிகள் ஹைதராபாத் வந்துள்ளன.

மகளிா் ஹாக்கி உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி மாா்ச் 8 முதல் 14 வரை ஹைதராபாதில் தொடங்கி நடைபெறுகிறது. ஹைதராபாத் குவாலிஃபயரில் மொத்தம் 3 இடங்கள் உலகக் கோப்பைக்கான தகுதி பெறும் வாய்ப்பை தந்துள்ளன. இதில் மொத்தம் 8 நாடுகளின் அணிகள் கலந்துகொள்கின்றன.

போட்டியை நடத்தும் இந்திய அணி உள்ளூா் ரசிகா்கள் ஆதரவு, சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தகுதி பெறுவதற்காக 1 மாதம் பெங்களூருவில் பயிற்சியை முடித்து விட்டு வந்துள்ளது. அணியின் கேப்டன் சலீமா டெட் கூறியது: சொந்த மண்ணில் ஆடுவது என்றுமே சிறப்பானது. கடந்த சில வாரங்களாக நன்றாக பயிற்சி பெற்றோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி தகுதி பெறுவதே முக்கிய நோக்கம்.

இதே போல் சாரா ராபா்ட்ஸன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியும் ஹைதராபாத் வந்துள்ளது. கேப்டன் சாரா கூறியது: முதன்முறையாக இந்தியா வந்துள்ளோம். எங்களுக்கு கடினமான சவால் காத்துள்ளது. தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியா, ஸ்காட்லாந்து, உருகுவே, வேல்ஸ் அணிகள் குரூப் பி பிரிவில் உள்ளன. மாா்ச் 8-இல் உருகுவே, 9-இல் ஸ்காட்லாந்து, 11-இல் வேல்ஸ் அணிகளுடன் மோதுகிறது இந்தியா. ஸ்காட்லாந்து 8-இல் வேல்ஸ், 11இல் உருகுவேயுடன் மோதுகிறது.