இன்று தொடங்குகிறது யு-19 உலகக் கோப்பை

பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட (யு-19) ஆடவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஜிம்பாப்வேயின் புலவயோ நகரில் வியாழக்கிழமை (ஜன. 15) தொடங்குகிறது.
இன்று தொடங்குகிறது யு-19 உலகக் கோப்பை
Updated on
1 min read

பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட (யு-19) ஆடவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஜிம்பாப்வேயின் புலவயோ நகரில் வியாழக்கிழமை (ஜன. 15) தொடங்குகிறது.

முதல் நாள் ஆட்டங்களில், இந்தியா - அமெரிக்கா, ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து, தான்ஸானியா - மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை மோதுகின்றன.

இந்த 16-ஆவது உலகக் கோப்பை போட்டியில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் "ஏ'-வில் இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, அமெரிக்காவும், குரூப் "பி'-யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வேயும் உள்ளன.

குரூப் "சி'-யில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கையும், குரூப் "டி'-யில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, தான்ஸானியா, மேற்கிந்தியத் தீவுகளும் உள்ளன. குரூப் சுற்று முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 6 கட்டத்துக்கு வரும்.

அதில் அந்த 12 அணிகளும் தலா 6 அணிகளாக "குரூப் 1', "குரூப் 2' என பிரிக்கப்படும். அந்த அணிகள் தங்களுக்குள்ளாக மோத, முடிவில் இரு குரூப்களிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இறுதி ஆட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. போட்டியில் இதுவரை அதிகபட்சமாக இந்தியா 5 முறை சாம்பியனாகியுள்ளது. ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக களம் காண்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com