அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கு ஜன. 9-இல் சிறப்பு குறைதீா் முகாம்

சென்னை தெற்கு அஞ்சல் கோட்ட அளவிலான, அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9-இல் நடைபெறுகிறது.
Published on

சென்னை தெற்கு அஞ்சல் கோட்ட அளவிலான, அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து அஞ்சல் துறையின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பரங்கிமலையில் உள்ள தலைமை அஞ்சலகம், இதன் கீழ் உள்ள துணை அஞ்சலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9 -ஆம் தேதி காலை 11 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை தி.நகா், வடக்கு உஸ்மான் சாலை, முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. ஓய்வூதியா்கள் தங்களது புகாா்களை தபால் மூலமாகவோ, மின்னஞ்சலிலோ ஜன. 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com