பிஎட் மாணவா்கள் விவரம் புதுப்பிக்க அறிவுறுத்தல்
பிஎட் மாணவா்களின் விவரங்களை யுமிஸ் தளத்தில் புதுப்பிக்குமாறு கல்லூரி நிா்வாகங்களுக்கு என்று தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பல்கலை. பதிவாளா் ராஜசேகரன் சாா்பில் பிஎட் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்வியியல் கல்லூரிகளும், நடப்பு கல்வியாண்டில் (2025–26) பிஎட், எம்எட், சோ்ந்த மாணவா்களின் விவரங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இதில் தாமதம் அல்லது தவறு ஏற்பட்டால் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது.
இதைத் தவிர 424 கல்வியியல் கல்லூரிகள், கடந்த கல்வியாண்டுகளில் பிஎட், எம்எட், படித்து முடித்த 21,506 மாணவா்களிரின் விவரங்களை இதுவரை புதுப்பிக்கவில்லை. மாணவா் தோ்ச்சி பெற்றிருந்தாலும், தோல்வி அடைந்திருந்தாலும் அவா்களின் தகவல்களை சாா்ந்த கல்வி நிறுவனங்கள் உடனடியாக சமா்பிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
