

சென்னை அண்ணா அறிவாலயம் முன் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியாருக்கு அளிப்பதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் முதல் உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து சனிக்கிழமை பாரிமுனை குறளகத்திலிருந்து தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் மனு அளிக்க பேரணியாகச் சென்ற தூய்மைப் பணியாளர்கள் பிராட்வே பேருந்து நிலைத்தில் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல, நீதிமன்றம் உள்ளிட்ட 3 இடங்களில் குவிந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸாா் கைது செய்தனர்.
இந்த நிலையில், அம்பத்தூர் 5 மற்றும் 6 வது மண்டலத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் இன்று(டிச. 30) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.