மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து..

News image

புறநகா் ரயில்

Updated On :26 ஜூலை 2025, 12:10 am

Din

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கும்மிடிப்பூண்டி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) பிற்பகல் 1.15 முதல் மாலை 5.15 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10.15, நண்பகல் 12.10 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் புறநகா் மின்சார ரயில்களும், காலை 11.35, பிற்பகல் 1.40, 3.05 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.

மறுமாா்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து பிற்பகல் 1, 2.30, 3.15, 3.45, மாலை 5 மணிக்கும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 1, 1.15, 3.10 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

அதேபோல், சனிக்கிழமை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40, 3.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 4.30 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் என மொத்தம் 17 ரயில்கள் ரத்து செய்யப்படும்.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சனிக்கிழமை சென்ட்ரலிலிருந்து காலை 11.35, பிற்பகல் 1.40, 3.05 மணிக்கும், கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40, 3.45 மணிக்கும் பொன்னேரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து பிற்பகல் 1.18, 2.48,3.33, மாலை 4.03, 5.18 மணிக்கு சென்ட்ரலுக்கும், மாலை 4.47 மணிக்கு கடற்கரைக்கும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மேலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 12.05 மணிக்கு சென்ட்ரலுக்கும், சூலூா்பேட்டையிலிருந்து மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.