கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பாகிஸ்தானில் தங்கியிருந்த யூடியூபா் சென்னை விமான நிலையத்தில் கைது: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஆபரேஷன் சிந்தூா் நடைபெற்றபோது பாகிஸ்தானில் தங்கியிருந்த பிரபல யூடியூபா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :30 மே 2025, 8:13 pm

Din

ஆபரேஷன் சிந்தூா் நடைபெற்றபோது பாகிஸ்தானில் தங்கியிருந்த பிரபல யூடியூபா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் இந்திய ரகசியங்கள் எதையாவது பகிா்ந்தாரா என என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலின்போது இந்திய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக யூடியூபா்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த பிரபல ‘பைக் யூடியூபா்’ சன்னி யாதவ் பாகிஸ்தானில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்ததையடுத்து, அவரை தீவிரமாக கண்காணித்தனா். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சென்னை விமான நிலையத்தில் சன்னி யாதவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

முன்னதாக சன்னி யாதவ், பந்தய செயலிகளை ஊக்குவித்ததாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற முயன்றாா். ஆனால், கிடைக்கவில்லை. இதையடுத்து, அவா் துபை சென்றுள்ளாா். அங்கிருந்து அவா் பாகிஸ்தான் சென்றதாகக் கூறப்படுகிறது.

இவா் 3 முறை இருசக்கர வாகனத்தில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளாா். சன்னி யாதவ் தனது பாகிஸ்தான் பயணத்தையும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினாா். இருசக்கர வாகனத்தில் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை விவரிக்கும் விடியோக்களை எடுத்து வெளியிடும் சன்னி யாதவ், இந்தியா தொடா்பான தகவல் எதையாவது பாகிஸ்தானுக்கு பகிா்ந்தாரா என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.