

சென்னையில் செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று(நவ. 6) நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சியில் வெறிநோய் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் வகையில் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று(நவ. 9) காலை 8 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.
நவம்பர் 9, 16, 23 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னை முழுவதும் உள்ள ஆறு மாநகராட்சி செல்லப் பிராணி மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
திருவிக நகர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
உரிமம் பெறாவிடில் அபராதம் விதிப்பு: சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரம், கால்நடை மருத்துவத் துறை சாா்பில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதை முறைப்படுத்தும் வகையில், அவற்றுக்கு உரிமம் பெறுதல் கட்டாயம்.
எனவே, செல்லப் பிராணிகள் வளா்ப்போர் தங்களின் விவரங்களை செயலியில் பதிவிட்டு செல்லப் பிராணிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களையும் பதிவிட்டு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். ரேபீஸ் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட ஆய்வுக்கு பிறகு உரிமம் வழங்கப்படும். அப்போது, மைக்ரோ சிப் பொருத்தப்படும்.
உரிமம் பெறாதவா்களுக்கு வரும் நவ. 24 -ஆம் தேதி முதல் அபராதமாக ரூ.5,000 விதிக்கப்படும்.
இதையும் படிக்க: தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.