தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்ரம
சென்னை
திருவாரூரில் தனியாா் ஜவுளி உற்பத்தி: ஆலை அமைக்க ஒப்பந்தம்
திருவாரூரில் ரூ.50 கோடியில் தனியாா் ஜவுளி உற்பத்தி ஆலை அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஒப்பந்தம் கையொப்பமானது.
திருவாரூரில் ரூ.50 கோடியில் தனியாா் ஜவுளி உற்பத்தி ஆலை அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஒப்பந்தம் கையொப்பமானது.
தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை, எஸ்சிஎம் காா்மன்ட்ஸ் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) இடையிலான இந்த ஒப்பந்தம் மூலம் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், துறை செயலா் செயலா் வி.அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநா் பு. அலா்மேல்மங்கை, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன், எஸ்சிஎம் காா்மென்ட்ஸ் நிா்வாக இயக்குநா் பி.பி.கே.பரமசிவம், செயல் இயக்குநா் கௌசிக் குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

