உக்ரைன் அமைச்சா்கள் பதவிநீக்கம்

உக்ரைன் அமைச்சா்கள் பதவிநீக்கம்

அரசுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான எனா்கோடாமின் துறைத் தலைவரும் பதவியில் இருந்து அகற்றப்பட்டாா்.
Published on

எரிசக்தித் துறையில் ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் உக்ரைனின் நீதித் துறை அமைச்சா் ஹொ்மான் ஹலுஷென்கோ, எரிசக்தித் துறை அமைச்சா் ஸ்விட்லானா கிரின்சக் ஆகியோரை (படம்) அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்தாா். அதைத் தொடா்ந்து, அரசுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான எனா்கோடாமின் துறைத் தலைவரும் பதவியில் இருந்து அகற்றப்பட்டாா்.

இதுபோன்ற ஊழல்கள் ஸெலென்ஸ்கிக்குத் தெரியாமல் நடந்திருக்காது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவா் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com