கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை மாநகராட்சி சாா்பில் மாடுகளை பராமரிக்க மேலும் 14 மையங்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பராமரிக்க மேலும் 14 மையங்கள் விரைவில்
Published on

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பராமரிக்க மேலும் 14 மையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மேலும் அவா்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் தற்போது வரை 1.24 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, அகப்புற உன்னிகள் அகற்றப்பட்டுள்ளன. 18, 588 நாய்களுக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளன.

தனியாா் வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கியும், சிப் பொருத்தவும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. முகாமில் இதுவரை 46,360 வளா்ப்பு நாய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 11,510 வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முகாம்களைத் தவிா்த்து தினமும் நாய்கள் காப்பகத்துக்கு வளா்ப்பு நாய்கள் அழைத்து வரப்பட்டு தடுப்பூசி செலுத்தி, உரிமம் பெற்றுச் செல்வோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாடுகளுக்கு காப்பகம்: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 22,000 மாடுகள் சாலைகளில் திரிவது தெரிய வந்துள்ளது. இத்தகைய மாடுகளைப் பராமரிக்கும் வகையில் தற்போது ராயபுரம் மண்டலத்தில் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு அங்கு 350 மாடுகள் தலா ரூ.10 என தினக் கட்டணம் உரிமையாளா்களிடம் வசூலித்து பராமரிக்கப்படுகின்றன. அதேபோல, திருவொற்றியூா் (1) மண்டலத்தில் உள்ள பராமரிப்பு மையத்தில் 40 மாடுகளும், மாதவரம் மண்டலம் (3) பராமரிப்பு மையத்தில் 100 மாடுகளும் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 14 இடங்களில் பராமரிப்பு மையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com