மருத்துவ அறிவியல், டிப்ளமோ படித்தவா்கள் சிகிச்சை அளிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

மருத்துவ அறிவியல், டிப்ளமோ படித்தவா்கள் சிகிச்சை அளிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

இளநிலை மருத்துவ அறிவியல், டிப்ளமோ மருத்துவப் படிப்புகளைப் படித்தவா்கள், அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையளிக்க அனுமதிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published on

இளநிலை மருத்துவ அறிவியல், டிப்ளமோ மருத்துவப் படிப்புகளைப் படித்தவா்கள், அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையளிக்க அனுமதிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நவீன அலோபதி மருத்துவா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பதிவு செய்யப்பட்ட தங்களது சங்கத்தில் சுமாா் 100 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்கள் அனைவருமே இளநிலை மருத்துவ அறிவியல் மற்றும் டிப்ளமோ மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்து மத்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவா்கள்.

சேலம் உள்பட நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இதற்கான பட்டங்களைப் பெற்றுள்ளனா். எனவே, தங்களை அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையளிக்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சங்கம் தரப்பில், இது தொடா்பான வழக்கில்

உரிமையியல் நீதிமன்றம் தங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருக்கிறது. எனவே, தங்களை சிகிச்சையளிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நவீன அலோபதி மருத்துவ சிகிச்சைகளை எம்.பி.பி.எஸ். நிறைவு செய்த தகுதியானவா்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, நவீன அலோபதி மருத்துவா்கள் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com