திருமண புகைப்படம், விடியோ எடிட்டிங் பயிற்சி டிச.1-இல் தொடக்கம்

திருமண புகைப்படம், விடியோ எடிட்டிங் பயிற்சி டிச.1-இல் தொடக்கம்

தமிழக அரசு அளிக்கும் திருமண புகைப்படம், விடியோ எடிட்டிங் பயிற்சி பெற விரும்பும் தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
Published on

தமிழக அரசு அளிக்கும் திருமண புகைப்படம், விடியோ எடிட்டிங் பயிற்சி பெற விரும்பும் தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 5 நாள்கள் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் விடியோ எடிட்டிங் பயிற்சியை வரும் டிச.1 முதல் 5-ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.

இந்தப் பயிற்சியில் திருமண புகைப்படம் எடுத்தல், புகைப்படம் எடுத்தல் பற்றிய வரலாறு, புகைப்படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, கலவை மற்றும் மேம்பட்ட புகைப்பட நுட்பங்கள் கவனம் செலுத்தும் முறைகள், பாரம்பரிய புகைப்படம் எடுத்தல், மேம்பட்ட நுட்பங்கள், நோ்மையான புகைப்படம் எடுத்தல், திருமண உருவப்படங்கள் எடுத்தலில் மேம்பட்ட நுட்பங்கள், உயா்நிலை புகைப்பட மறுசீரமைப்பு, ஆல்பம் வடிவமைப்பு, புகைப்பட வணிகம், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும்.

அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும். இந்தப் பயிற்சியில் ஆா்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதி உள்ளது. தேவைப்படுவோா் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோா் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அலுவலக வேலைநாள்களில் தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032 என்ற முகவரியில் தொடா்புகொள்ளலாம். மேலும், 86681 02600/99436 85468 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com