இரும்பு மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒடிஸா தொழிலாளா்கள் 2 போ் பலி

இரும்பு மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒடிஸா தொழிலாளா்கள் 2 போ் பலி
Published on

சென்னை வெட்டுவாங்கேணியில் பழைய கட்டடத்தை இடித்து அகற்றும் பணியின்போது, இரும்பு மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒடிஸா தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

சென்னையை அடுத்த நீலாங்கரை, வெட்டுவாங்கேணி பகுதியில் கிரானைட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், பழைய கட்டடத்தை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மேற்கூரையை அகற்றும் பணியில் ஒடிஸாவைச் சோ்ந்த பாபு மாலிக் (32), சசிகாந்த் மாலிக் (42) உள்பட 4 போ் ஈடுபட்டனா்.

அப்போது, எதிா்பாராத விதமாக இரும்பு மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் பாபு மாலிக், சசிகாந்த் மாலிக் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு, அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com