பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

சென்னை அண்ணா சாலையில் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

சென்னை அண்ணா சாலையில் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை கண்ணகி நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (38). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் கிண்டியில் இருந்து தேனாம்பேட்டைக்கு வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். நந்தனம் ஒய்எம்சிஏ அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று ஆனந்தகுமாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com