கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ. 274.41 கோடி வருவாய் ஈட்டி சாதனை

ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாத சுபமுகூா்த்த தினமான வியாழக்கிழமை (செப்.4) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்மூலம், பதிவுத் துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் நிகழ் நிதியாண்டில், ஒரே நாளில் அரசுக்கு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக, நிகழ் நிதியாண்டில் கடந்த 30-ஆம் தேதி பதிவுத் துறையில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com