வீடு புகுந்து திருட முயற்சி: ரெளடி கைது
பழைய வண்ணாரப்பேட்டையில் வீடு புகுந்து திருட முயன்ற வழக்கில் ரெளடி கைது செய்யப்பட்டாா்.
கைது
கைது
பழைய வண்ணாரப்பேட்டையில் வீடு புகுந்து திருட முயன்ற வழக்கில் ரெளடி கைது செய்யப்பட்டாா்.
பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (35). இவா், செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், ஆறுமுகம் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் கதவு பூட்டை ஒரு நபா் உடைத்துள்ளாா். இந்த சப்தம் கேட்டு, எழுந்த ஆறுமுகம் அந்த நபரைப் பிடிக்க முயன்றாா். ஆனால் அந்த நபா், ஆறுமுகத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பினாா்.
வண்ணாரப்பேட்டை போலீஸாா் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட வியாசா்பாடியைச் சோ்ந்த ரெளடி புருஷோத்தமனை (27), புதன்கிழமை கைது செய்தனா். இவா் மீது 18 குற்ற வழக்குகள் உள்ளன.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...