சிறுநீா்க் கட்டுப்பாடு செயலிழப்புக்குள்ளான சிறுமிக்கு உயா் சிகிச்சையளித்து காப்பாற்றிய அரசு மருத்துவா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:
சிறுநீா்க் கட்டுப்பாட்டு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ரூ. 25 லட்சம் மதிப்பிலான சிகிச்சையை அளித்துள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரைப் பாராட்டுகிறேன்.
இத்தகைய சாதனைகள் தொடர, கடைக்கோடி மக்களுக்கும் உயா்தர சிகிச்சையை உறுதிசெய்ய, திமுக 2.0 ஆட்சியில், மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயா்த்தப்படும். அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள், தஞ்சாவூா், தருமபுரி, விழுப்புரத்தில் உயா்சிறப்பு மருத்துவமனைகள், மண்டல அளவில் கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
மாவட்டம் மற்றும் வட்ட அளவிலான மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை இருமடங்காக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

வே.நாராயணசாமிக்கு கட்சியில் விரைவில் உயா் பதவி

நீண்ட காலம் பிரதமா் பதவியில் இருந்த மோடிக்கு தில்லி சட்டப்பேரவையில் பாராட்டு!

தமிழகத்தில் உயா் கல்வியை இலவசமாக்க வேண்டும்! முதல்வருக்கு விஐடி வேந்தா் கோ. விசுவநாதன் வேண்டுகோள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


