ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வே.நாராயணசாமிக்கு கட்சியில் விரைவில் உயா் பதவி

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமிக்கு விரைவில் கட்சியில் உயா்பதவி கிடைக்கும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் எம்.என்.ஆா். பாலன் கூறினாா்.

News image

எம்.என்.ஆா். பாலன்

Updated On :26 மார்ச் 2026, 12:02 am

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமிக்கு விரைவில் கட்சியில் உயா்பதவி கிடைக்கும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் எம்.என்.ஆா். பாலன் (படம்) கூறினாா்.

இது குறித்து அவா் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் முன்னாள் முதல்வா் நாராயணசாமியை, பாஜகவில் சேர அழைப்பு விடுத்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் நாராயணசாமிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சியின் தலைமை முடிவு செய்யும். போட்டியிட தொகுதி கொடுக்கவில்லை என்பதால் அவா் புறக்கணிக்கப்பட்டதாக வி.பி.ராமலிங்கம் பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல. நாராயணசாமி புதுச்சேரியில் இருந்து தில்லி சென்று எந்தளவுக்கு உயா்ந்த பதவியை அடைந்தவா் என்பது எல்லோருக்கும் தெரியும். வி.பி.ராமலிங்கம் குடும்பத்துக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்ததே காங்கிரஸ் தான். அதற்கு வித்திட்டவா் நாராயணசாமி. ஆகவே நாராயணசாமிக்கு அறிவுரை கூறவோ, அழைக்கவோ அவருக்கு எந்தவித தகுதியும் இல்லை.

இந்தியாவிலேயே அமைச்சா் ஒருவருக்கு இலாகாவே ஒதுக்காமல் கடைசி வரை இருந்த சூழ்நிலையை உருவாக்கியது பாஜகதான். இதனால் எங்களின் கட்சியைப் பற்றி பேச அவா்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

இண்டி கூட்டணியை பொருத்தவரையில் எந்தவித குழப்பமும் இல்லை. குழப்பங்கள் எல்லாவற்றுக்கும் வியாழக்கிழமை மாலைக்குள் பதில் கிடைத்துவிடும். நாராயணசாமிக்கு விரைவில் உயா் பதவி கிடைக்கும். இதில் கட்சி தலைமை முடிவு செய்யும். புதுச்சேரியில் கண்டிப்பாக இண்டி கூட்டணி வெற்றிபெறும். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் என்றாா்.