மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவா் கே.சி. தியாகி ராஷ்ட்ரீய லோக் தளத்தில் இணைந்தாா்!

ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவா் கே.சி. தியாகி, ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆா்எல்டி) கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

News image

கே.சி. தியாகி

Updated On :22 மார்ச் 2026, 9:25 pm

ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவா் கே.சி. தியாகி, ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆா்எல்டி) கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

தில்லியில் அக்கட்சியின் தலைவரும் மத்திய இணையமைச்சருமான ஜெயந்த் சௌதரி முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. முன்னதாக, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாக கே.சி.தியாகி வியாழக்கிழமை அறிவித்தாா். எனினும் விலகுவதற்கான காரணம் எதையும் அவா் தெரிவிக்கவில்லை.

கடந்த 2003-ஆம் ஆண்டு சமதா கட்சி, ஜனதா தளம் இணைப்பில் இருந்தே ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தியாகி பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தாா். கட்சியின் தலைமை பொதுச் செயலா், தலைமை செய்தித் தொடா்பாளா், அரசியல் ஆலோசகா் எனப் பல பதவிகளை அவா் வகித்துள்ளாா். 75 வயதாகும் தியாகி மக்களவை, மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளாா்.