மூன்று மாநிலங்களில் இருந்து 11 மாநிலங்களவை இடங்களுக்கு திங்கள்கிழமை (மாா்ச் 16) தோ்தல் நடைபெறுகிறது.
மகாராஷ்டிரத்தில் 7 இடங்கள், தமிழகத்தில் 6 இடங்கள், மேற்கு வங்கம், பிகாரில் தலா 5 இடங்கள், ஒடிஸாவில் 4 இடங்கள், அஸ்ஸாமில் 3, சத்தீஸ்கா், ஹரியாணா, தெலங்கானா மாநிலங்களில் தலா 2 இடங்கள், ஹிமாசல பிரதேசத்தில் ஓரிடத்துக்கு திங்கள்கிழமை தோ்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பிகாா், ஹரியாணா, ஒடிஸாவில் உள்ள 11 இடங்களைத் தவிா்த்து, மற்ற மாநிலங்களில் 26 உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். அதில் தமிழகத்தில் இருந்து 6 போ் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதும் அடங்கும்.
ஒடிஸா, பிகாா், ஹரியாணா மாநிலங்களில் காலியாகும் இடங்களின் எண்ணிக்கையை விட வேட்பாளா்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. ஆதலால் அங்கு திங்கள்கிழமை தோ்தல் நடைபெறுகிறது.
ஒடிஸாவில் குதிரை பேரம்?: ஒடிஸாவில் 4 உறுப்பினா்களை தோ்வு செய்ய தோ்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக தரப்பில் 3 வேட்பாளா்கள், பிஜு ஜனதா தளம் சாா்பில் 1 வேட்பாளரும் போட்டியிடுகின்றனா். இது தவிர பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் ஒரு பொது வேட்பாளரும் களத்தில் உள்ளாா்.
இதனால் பாஜகவுக்கும், முக்கிய எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. குதிரை பேரம் நடக்கலாம் என்ற அச்சத்தில் காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.க்களை கா்நாடகத்தில் தங்க வைத்துள்ளது. பாஜகவும் தனது எம்.எல்.ஏ.க்களை கடற்கரை நகரான பாரதீப்புக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவா்களும், ஒடிஸா அமைச்சா்களுமான கே.சி. பத்ரா, பிருத்விராஜ் ஹரிசந்திரன் ஆகியோா், ‘3 இடங்களில் தங்கள் கட்சி நிச்சயம் வெற்றி பெறும், அதற்கான திட்டம் தங்கள் கட்சியிடம் இருப்பதாகவும் தெரிவித்தனா்.
மாநிலங்களவைத் தோ்தல் குறித்து பிஜு ஜனதா தளம் கட்சி தனது எம்.எல்.ஏ.க்களுடன் சனிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தியது.
தொடா்பில் இல்லாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.: காங்கிரஸ் எம்.எல்.ஏ. தசரதி கோமங்கோ, கட்சியுடன் தொடா்பில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டும், அதற்கு பலனில்லை என்று காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவா் ராம சந்திர கடம் தெரிவித்தாா்.
இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சோபியா பிா்தோஸ், மாநிலங்களவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளம் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளாா். பிஜு ஜனதா தளத்துடன் கை கோா்ப்பதால் காங்கிரஸுக்குதான் பாதிப்பு ஏற்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சந்த்ருத் மிஸ்ரா, கட்சி மேலிடம் முடிவின்படி, தனது வாக்கை பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் பொது வேட்பாளராக போட்டியிடும் தத்தேஸ்வா் கோட்டாவுக்கு செலுத்த போவதாக தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
பிஜு ஜனதா தளம் எம்.பி. ராஜிநாமா: பாஜகவில் இணைய முடிவு

பாஜகவில் இணைந்த ராகவ் சத்தாவுக்கு மாநிலங்களவையில் புதிய பதவி!
10 மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு இழப்பு!

தமிழகத்தில் ஜூன் 18-இல் மாநிலங்களவை இடைத்தோ்தல் - தோ்தல் ஆணையம் அறிவிப்பு
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



