மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தாவுக்கு மாநிலங்களவையில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா, மாநிலங்களவையின் மனுக்கள் மீதான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் இந்தக் குழுவை மறுசீரமைப்பு செய்து புதிதாகப் பணியாற்ற 10 உறுப்பினர்களைப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. அதில், ’ராகவ் சத்தா குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் தலைவரால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட இந்தக் குழு தொடர்பான உத்தரவு மே 20 முதல் அமலுக்கு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவை மனுக்கள் மீதான குழுவில் ராகவ் சத்தா தவிர்த்து ஹர்ஷ் மஹாஜன், குலாம் அலி, ஷம்பு ஷரன் படேல், மயங்க் குமார் நாயக், மஸ்தான் ராவ் யாதவ் பீதா, ஜெபி மாதர் ஹிஷாம். சுபாஷிஷ் குந்தியா, ருங்ரா நர்ஸாரி, சந்தோஷ் குமார் பி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு அறிக்கையில், மாநிலங்களவை உறுப்பினர் மேனகா குருசாமி, மாநிலங்களவையின் பெருநிறுவனச் சட்டங்கள் (திருத்த) மசோதா மீதான கூட்டுக் குழுவின் உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல் உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் கடந்த மாதம் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Raghav Chadha appointed chairman of Rajya Sabha Committee on Petitions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

மாநிலங்களவை: மூன்றில் இரு பங்கு பலம்பெற தே.ஜ. கூட்டணிக்கு எத்தனை எம்பிக்கள் தேவை?
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!








