தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கைநீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்
/

சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?

சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம் என்று வெளியான புகைப்படங்களில் உண்மை இல்லை.

News image

டிஜிட்டல் முறையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி - கோப்புப்படம்

Updated On :23 மே 2026, 12:10 pm IST

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து, தேர்வெழுதிய ஏராளமான மாணவர்களுக்கு பெருந்துன்பம் நேரிட்டிருக்கிறது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே 13-ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு மாணவா்கள் விடைத்தாள்களை ஆசிரியா்கள் கையால் திருத்துவதற்குப் பதிலாக அந்த விடைத்தாள்களின் ஸ்கேன் பிரதிகளை கணினியில் பாா்த்து மதிப்பீடு செய்யும் ‘ஆன் ஸ்கீரின் மாா்க்கிங் முறை’ (ஓஎஸ்எம்) நடைமுறைப்படுத்தப்பட்டதால் தங்களது மதிப்பெண் வெகுவாக குறைந்துவிட்டதாக மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

இதனால், விடைத்தாள் நகல் பெற, ஆன்லைன் மூலம் விடைத்தாளைப் பார்க்க லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விடைத்தாள்கள் மங்களாக இருப்பதாக ஏராளமானோர் புகார் அளித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, ஒரு பாடத்துக்கான விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால், நேற்று சமூக வலைத்தளங்களில், ஒரு பாடத்துக்கு மறுமதிப்பீடு செய்ய ரூ.69,420 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சிபிஎஸ்இ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், விடைத்தாள் நகல் பெற ரூ.300 கட்டணம் என்றும் ஒவ்வொரு விடையையும் மறுமதிப்பீடு செய்ய தலா ரூ.25 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அது உண்மையல்ல என்றும், தொழில்நுட்பக் கோளாறால் அவ்வாறு காட்டப்பட்டதாகவும் தகவர்லகள் வெளியாகியுள்ளன.

மேலும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான கடைசி தேதி ஞாயிற்றுக்கிழமை (மே 24) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கான விண்ணப்பப் பதிவு என்ற இணையதளம் மே 19-ஆம் தேதி முதல் தொடங்கியது. இருப்பினும், இந்த இணையதளத்தில் தொடா்புடைய பக்கத்தை முறையாகத் திறக்க இயலவில்லை. அது மீண்டும் மீண்டும் முடங்குகிறது. இணையவழியில் கட்டணம் செலுத்திய பிறகும் தங்கள் விண்ணப்பங்கள் வெற்றிகரமாகச் சமா்ப்பிக்கப்படவில்லை என பல்வேறு புகாா்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இணையதளத்தில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான பயன்பாட்டுச் சுமை மற்றும் அங்கீகரிக்கப்படாத நபா்களின் குறுக்கீட்டு முயற்சிகள் காரணமாக, இணையதளம் தொடா்ந்து தொழில்நுட்பப் பிரச்னைகளைச் சந்தித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Summary

CBSE charges Rs. 69,000 for revaluation of answer sheets! What is the truth?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.