பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி

கோவை சிறுமி கொலை குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி விளக்கம்...

Coimbatore Girl Sexually Assaulted and Murdered: IG Interview

மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி - X

Published On :

கோவை சூலூர் அருகே கொலை செய்யப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது உடற்கூராய்வில் உறுதியாகியுள்ளதாக மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி கூறினார்.

இதுபற்றி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த ஐ.ஜி. ரம்யா பாரதி,

"மே 21 ஆம் தேதி 10 வயது சிறுமி காணாமல் போனதாக இரவு 8.30 மணியளவில் கோவை சூலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பள்ளபாளையம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அதனடிப்படையில் இரவு 10 மணிக்கு வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படைகளை அமைத்து தேடினோம். 250 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பக்கத்து வீட்டுக்காரரான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி(33) கடத்தியுள்ளது தெரிய வந்தது. அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் வைத்து கொலை செய்துள்ளார்.

குற்றவாளி கார்த்தி | மோகன் ராஜ்

குற்றவாளி கார்த்தி | மோகன் ராஜ்

பின்னர் தலைமறைவாக இருந்த கார்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். தப்பிக்க முயன்றபோது காலில் அடிபட்டுள்ளதால் கோவை மருத்துவக் கல்லூரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்தி ஏற்கெனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கார்த்திக்கு துணையாக இருந்த அவரது நண்பர் மோகன் ராஜும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கூலித் தொழிலாளிகள்.

சிறுமியின் குடும்பத்தினருடன் சேர்ந்து குற்றவாளி கார்த்தியும் சிறுமியைத் தேடியுள்ளார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது உடற்கூராய்வில் உறுதியாகியுள்ளது.

குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பத்திாிகை விரைவாக தயாாிக்கப்பட்டு வழக்கை விரைவாக நடத்தி, விரைந்து தண்டனை பெற்றுத் தரப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த பேட்டியின்போது கோவை சரக டிஐஜி சாமிநாதன், கோவை மாவட்ட எஸ்.பி. பவன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Coimbatore Girl Sexually Assaulted and Murdered: IG Interview

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.