புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு, புதுச்சேரி சோலை நகரை சோ்ந்த 9 வயது பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா். அவரது சடலம் அந்தப் பகுதியிலுள்ள கழிவுநீா் கால்வாயில் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த விவேகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்திருண்ட நிலையில், விவேகானந்தன் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கருணாஸ் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு தரப்பில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குற்றவாளிக்கான தண்டனை விவரங்களை மே 5 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
Summary
Verdict in Puducherry Girl's Sexual Murder Case!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு: குற்றவாளியை காணொலியில் ஆஜா்படுத்த உத்தரவு
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி

கோவை சூலூர் சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர முதல்வர் உறுதி
கோவை சிறுமி படுகொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதில் அரசு உறுதி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




