இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கோவை சிறுமி படுகொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதில் அரசு உறுதி!

கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என அமைச்சர் சம்பத்குமார்

Coimbatore Girl Murder: Government Committed to Ensuring Maximum Punishment for Culprits

கோவை சிறுமி படுகொலை சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் - கோப்புப் படம்

Published On :23 மே 2026, 12:04 pm IST

கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என அமைச்சர் சம்பத்குமார் உறுதியளித்துள்ளார்.

கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுடன் அமைச்சர் சம்பத்குமார் பேசியதாவது, "புகாரளிக்கப்படுவதற்கு முன்பாகவே சம்பவம் நடந்திருக்கிறது. துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். உடற்கூறாய்வு அறிக்கை வெளியானவுடன், அடுத்தகட்ட விசாரணையும் துரிதப்படுத்தப்படும்.

குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கித் தருவதில் அரசு உறுதியாக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரண உதவியைச் செய்யவும் அரசு தயாராக இருக்கிறது. இம்மாதிரியான சம்பவம், இதுவே இறுதியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பயம் இருக்க வேண்டும். இதுபோன்ற சிந்தனையே வராத அளவுக்கு தண்டனைகள் கடுமைப்படுத்த வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். அதனைச் செயல்படுத்தவும் செய்வார்.

இந்தக் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவது எங்கள் கடமையாகும் என்று தெரிவித்தார்.

கோவை சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Summary

Coimbatore Girl Murder: Government Committed to Ensuring Maximum Punishment for Culprits

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.