பாஜகவில் இணைந்த ராகவ் சத்தா எம்.பி.க்கு 63 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் ஆதரவளிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாபில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா, உள்கட்சிப் பூசல் காரணமாக, வெள்ளிக்கிழமையில் பாஜகவில் இணைந்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், ராகவ் சத்தா பாஜகவில் இணைந்திருந்தாலும், அவருடன் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் பலரும் தொடர்ந்து தொடர்பிலிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் முன்னர் இருந்தே உள்கட்சிப் பூசல் இருப்பதாகவும், கட்சி மீது சுமார் 18 எம்எல்ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கட்சியிலிருந்து விலகிய ராகவ் சத்தாவுக்கு 63 எம்எல்ஏ-க்கள் ஆதரவளிப்பதாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாப் சட்டப்பேரவையில் 117 இடங்கள் உள்ள நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களின் ஆதரவை ராகவ் சத்தா பெறுவாரேயானால், அது கட்சியின் தலைமைத்துவப் போட்டிக்கும் வழி வகுக்கலாம்.
அதுமட்டுமின்றி, அதிகாரபூர்வ அறிவிப்புகள் இல்லையென்றாலும், ராகவ் சத்தா முதல்வராக வேட்பாளராகக் கூட வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Summary
AAP Faces Rebellion in Punjab as 63 MLAs Back Raghav Chadha: Reports
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த ராகவ் சத்தாவுக்கு மாநிலங்களவையில் புதிய பதவி!

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



