கேரளத்தில் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது 77 பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர்களில் 15 பேர் தீவிர அறிகுறிகளுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதையடுத்து தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோரைத் தீவிரமாக கண்காணிக்கவும் அறிகுறிகள் இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தவும் மருத்துவ அலுவலர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Summary
Nipah virus infection confirmed in kerala; Ordered to intensify surveillance in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் நிபா வைரஸ் எச்சரிக்கை: ஒருவருக்குத் தொற்று பாதிப்பு!

மின் விநியோக சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள் அமைத்தது தமிழக அரசு!

தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள்?
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani




