இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கேரளத்தில் நிபா வைரஸ் எச்சரிக்கை: ஒருவருக்குத் தொற்று பாதிப்பு!

கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு பற்றி..

News image

நிபா வைரஸ் - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:11 pm IST

கேரளத்தின், கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 43 வயதுடைய ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோழிக்கோட்டைச் சேர்ந்த அந்த நபரின் மாதிரிகள் இறுதி செய்வதற்காக

புணேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கான முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபெரோக்கைச் சேர்ந்த தொழிலதிபரான அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகளின் தகவலின்படி, முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், புதன்கிழமை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் கூறுகையில்,

நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும்.

பாதிக்கப்பட்டவர் முதலில் காய்ச்சல் ஏற்பட்ட பின்னர் குறைந்தது. அதன்பிறகு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறுதி ஆய்வின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளாமல், சுகாதாரத்துறை வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Kerala is on high alert after the preliminary test of a 43-year-old man for Nipah virus infection at the Government Medical College here returned positive, officials said on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.