தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

துணை முதல்வர் பதவி? நிதீஷ் குமாரின் மகன் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைகிறார்!

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளத்தில் இணைவது குறித்து...

News image
ஐக்கிய ஜனதா தளத்தில் இணைகிறார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார்...- ANI
Updated On :7 மார்ச் 2026, 8:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளத்தில் இணைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதீஷ் குமார் 10 ஆவது முறையாக பிகாரின் முதல்வராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில், நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் எனக் கூறப்படுகிறது.

இதனால், நீண்டகாலமாக அரசியலில் இருந்து விலகியிருந்த நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், ஐக்கிய ஜனதா தளத்தில் இணையும் நிஷாந்த் குமாருக்கு பிகாரின் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பிகாரின் புதிய முதல்வராக கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.