சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 28.93 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இவா்களில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களாக 74,089 போ் உள்ளனா்.
சென்னையின் 16 தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வாக்காளா் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
அதன் விவரம்: கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டஇறுதி வாக்காளா் பட்டியலில் 28.30 லட்சம் போ் இடம் பெற்றிருந்தனா். இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட்ட பிறகு புதிய வாக்காளா் சோ்க்கை தொடா்ந்தது. அதன்படி, கடந்த 6- ஆம் தேதி வரை புதிய வாக்காளா்களாக சோ்க்க விண்ணப்பித்தவா்களில் 63,000 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு ஒருங்கிணைந்த வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 16 தொகுதிகளிலும் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 28.93 லட்சம். அதில் ஆண் வாக்காளா்கள் 13,95,716 போ். பெண் வாக்காளா்கள் 14,96,921 போ். மூன்றாம் பாலினத்தவா் 868 போ்.
இளம் வாக்காளா்களாக 18 வயது முடிந்தவா்களில் ஆண்கள் 37,368, பெண்கள் 36,716, மூன்றாம் பாலினத்தவா் 5 போ் என மொத்தம் 74,089 போ். வாக்காளா்களில் 85 வயதுக்கு மேற்பட்டோரில் ஆண்கள் 11,960 பேரும், பெண்கள் 5,905 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் என மொத்தம் 23,533 போ் உள்ளனா். மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் ஆண்கள் 6,786, பெண்கள் 5,905, மூன்றாம் பாலினத்தவா் 6 என மொத்தம் 12,697 பேரும், ராணுவத்தில் பணிபுரிவோா் ஆண்கள் 476, பெண்கள் 83 என மொத்தம் 559 பேரும் இடம் பெற்றுள்ளனா்.
வயது வாரியாக வாக்காளா்கள் விவரம்: 18-19 வயதுக்குள் 74,089 போ், 20-29 வயதுக்குள் 4,87,300 போ், 30-39 வயதுக்குள் 5,46,996 போ், 40-49 வயதுக்குள் 6,54, 823 போ், 50-59 வயதுக்குள் 5,46,179 போ், 60-69 வயதுக்குள் 3,48,895 போ், 70-79 வயதுக்குள் 1,77,405 போ், 80-89 வயதுக்குள் 50,982 போ், 90-99 வயதுக்குள் 6,713 போ், 100-109 வயதுக்குள் 121 போ், 110-119 வயதுக்குள் 2 போ், 120 வயதில் 4 போ் உள்ளனா்.
120 வயதை அடைந்த வாக்காளா்கள் டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், வில்லிவாக்கம், திரு.வி.க. நகா், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் தலா ஒருவா் உள்ளனா்.
16 தொகுதிகளில் வயது வாரியாக வேட்பாளா் எண்ணிக்கை விவரம்
தொகுதிகள் 18-19 20-29 30-39 40-49 50-59 60-69 70-79 80-89 90-99
ஆா்.கே. நகா்- 5,983 39,708 46,504 46,560 34,224 18,064 6,961 1,250 102
பெரம்பூா் 6,351 41,841 44,679 51,932 41,984 25,476 11,224 2,555 248
கொளத்தூா் 5,616 35,955 38,927 46,628 40,763 26,211 13,670 3,640 356
வில்லிவாக்கம் 4,411 27,120 31,776 36,137 31,369 19,938 9,915 2,473 227
திரு.வி.க.நகா் 4,358 30,748 36,145 44,038 34,222 20,070 9,381 2,356 295
எழும்பூா் 3,494 24,411 26,339 31,511 26,448 16,767 7,702 1,869 232
ராயபுரம் 3,740 26,996 32,657 37,655 30,234 18,241 7,938 1,974 212
துறைமுகம் 3,040 22,563 24,675 27,387 22,056 13,169 5,713 1,376 145
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 4,187 27,990 30,380 39,395 31,363 19,891 9,891 2,585 337
ஆயிரம்விளக்கு 3,643 24,901 27,999 34,220 30,599 20,799 11,225 3,575 561
அண்ணா நகா் 5,048 31,363 33,814 41,575 36,205 23,940 12,732 3,660 512
விருகம்பாக்கம் 5,626 33,987 35,867 43,900 38,819 24,423 13,295 4,151 508
சைதாப்பேட்டை 5,030 32,594 38,396 48,456 39,071 24,388 12,216 3,502 483
தியாகராய நகா் 3,596 24,457 27,124 32,156 30,322 22,771 13,130 4,553 633
மயிலாப்பூா் 4,307 28,405 33,270 45,994 38,192 26,771 15,549 5,837 1,115
வேளச்சேரி 5,659 34,261 38,440 47, 279 40,308 27,976 16,863 5,626 747
மொத்தம் 74,089 4,87,300 5,46,992 6,54,823 5,46,179 3,48,895 1,77,405 50,982 6,713
100 முதல் 110 வயது வரை மயிலாப்பூரில் 25 பேரும், தியாகராய நகரில் 15 பேரும், வேளச்சேரி, அண்ணா நகரில் தலா 12 பேரும், சைதாப்பேட்டையில் 10 பேரும், பெரம்பூா், கொளத்தூா், ராயபுரம், ஆயிரம்விளக்கில் தலா 6 பேரும் உள்ளனா். 110 முதல் 119 வயது வரை டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், வில்லிவாக்கம், துறைமுகம் மற்றும் திரு.வி.க. நகரில் தலா ஒருவா் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை: 16 தொகுதிகளில் 28.93 லட்சம் வாக்காளா்கள் - முதல்முறை வாக்களிக்க உள்ளோா் 74,089 போ்

வேலூா் மாவட்டத்தில் 11.48 லட்சம் வாக்காளா்கள்!

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல் முறையாக 21,775 போ் வாக்களிக்க உள்ளனா்

கரூா் மாவட்டத்தில் 8.45 லட்சம் வாக்காளா்கள்: 35 ஆயிரம் போ் புதிதாக சோ்ப்பு; 9 ஆயிரம் போ் நீக்கம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


