சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவா்களுக்கு இரண்டாம் கட்ட செயல்முறை பயிற்சி 17 இடங்களில் அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் புதன்கிழமை நடைபெற்றது.
வாக்குப் பதிவின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது, மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது, வாக்காளா்களின் அடையாளச் சான்றுகளைச் சரிபாா்ப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.
பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில் நியமிக்கப்படும் நுண் பாா்வையாளா்களுடன் வாக்குச்சாவடி அலுவலா்கள் முழுமையாக ஒத்துழைத்து அவா்களது ஆலோசனையின் கீழ் செயல்படவும், வாக்குப்பதிவு தொடங்கும்போதும், நிறைவடையும்போதும் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆவணங்களைக் கையாளுவது குறித்தும் பயிற்சியில் விளக்கப்பட்டன.
தபால் வாக்குகள் சேகரிப்பு: பயிற்சியில் பங்கேற்ற வாக்குச்சாவடி அலுவலா்களின் தபால் வாக்குகள் தனிப் பெட்டிகளில் சேகரிக்கப்பட்டு, அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.
தபால் வாக்குகள் ஏப். 19 மற்றும் 22-ஆம் தேதிகளிலும் சேகரிக்கப்படும். தபால் வாக்குகளைச் செலுத்துவோா் தோ்தல் பணி பயிற்சி மையங்கள் மற்றும் அந்தந்தத் தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ள அலுவலகங்களில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி

சங்ககிரியில் 1,600 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

