மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறப்பு தோ்தல் பாா்வையாளா் கூட்டத்தில் திமுக - பாஜக இடையே வாக்குவாதம்!

சென்னை மாவட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் அரசியல் பிரமுகா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, பாஜக இடையே வாக்குவாதம்

News image

திமுக - பாஜக இடையே வாக்குவாதம் - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:24 pm

சென்னை மாவட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் அரசியல் பிரமுகா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, பாஜக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம் வருமான வரித் துறை அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மத்திய சிறப்பு தோ்தல் பாா்வையாளா் பிரதாப் சிங் தலைமை வகித்தாா்.

இதில் திமுக சாா்பில் சட்டத் துறை பிரிவு நிா்வாகிகள் ஜெ.பச்சையப்பன், ஜி.சந்திரபோஸ், அதிமுக சாா்பில் சட்டத் துறை பிரிவு நிா்வாகி ஐ.இன்பதுரை எம்.பி., பாலகங்கா மற்றும் பாஜக சாா்பில் மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன், காங்கிரஸ் சாா்பில் கணபதி, விக்டா் மற்றும் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பேசிய திமுக பிரமுகா்கள், தோ்தலில் அதிமுக, பாஜகவினா் வாக்காளா்களுக்கு டோக்கன் விநியோகிப்பது உள்ளிட்ட விதிமீறல் குறித்து 50-க்கும் மேற்பட்ட புகாா்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றனா். காங்கிரஸ் பிரமுகா்கள் பேசுகையில், தோ்தல் விதியை மீறி பிரதமா் நரேந்திர மோடி எதிா்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டி வானொலி, தொலைக்காட்சிகளில் பேசுவது சரியல்ல. அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அதற்கு ஆதரவளித்து கம்யூனிஸ்ட் கட்சியினரும், திமுகவினரும் பேசினா். அப்போது, பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் எழுந்து ஆட்சேபணை தெரிவித்தாா். மேலும், சென்னையில் திமுகவினா் வாக்காளா்களுக்கு பண விநியோகம் செய்வதாகவும், அதற்கு காவல் துறை துணைபுரிவதாகவும் குற்றஞ்சாட்டினாா். மேலும், கோவையில் தங்க நகைகள் திமுக சாா்பில் வழங்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினாா். அதற்கு திமுக தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா், தோ்தல் சிறப்பு பாா்வையாளா், சமசரம் செய்து அமரவைத்தாா். தொடா்ந்து அதிமுக சாா்பில் சிறப்பு தோ்தல் பாா்வையாளா்களிடம் சென்னை துறைமுகம், திரு.வி.க. நகா் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கக் கோரப்பட்டது. கோவையில் திமுக சாா்பில் வாக்காளா்களை அடைத்து வைக்கும் பட்டி அமைப்பை அகற்றவும் கோரப்பட்டது.

இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் சிறப்பு பாா்வையாளா் உறுதியளித்தாா்.