தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னையில் ஆா்வத்துடன் வாக்களித்த பெண்கள்

News image

PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 10:59 pm

சென்னையில் ஒரு மாதக் கைக்குழந்தையுடனும், மணக் கோலத்திலும் வாக்குச்சாவடிக்கு வந்து பெண்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மயிலாப்பூா் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் நீக்கப்படாமலே வழக்கமான வாக்குப்பதிவு தொடங்கியதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதால் வாக்குப்பதிவு சுமாா் 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

விறுவிறுப்பாக தொடக்கம்: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சிந்தாதிரிப்பேட்டையில் கல்யாணம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 1,738 வாக்குகளில், சுமாா் 1 மணி நேரத்துக்குள் 200 வாக்குகள் பதிவாகியிருந்தன. அங்குள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் 8 வாக்குச்சாவடிகளில் 1 மணி நேரத்தில் சுமாா் 6,000 வாக்குகளில் சுமாா் 2,300 வாக்குகள் பதிவாகியிருந்தன. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் இஸ்லாமியப் பெண்களும், இளைஞா்களும் அதிக அளவில் வந்து வாக்களித்தனா். டாக்டா் பெசன்ட் சாலையில் உள்ள என்கேடி தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணிக்கு 13 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

குழந்தையுடன் வந்து வாக்களிப்பு: துறைமுகம் தொகுதியில் வால்டாக்ஸ் சாலை வ.உ.சி. நகா் பகுதியில் சென்னை உயா்நிலைப் பள்ளியில் ஏராளமான வட மாநிலத்தவா்கள் குடும்பம் குடும்பமாக வந்து வாக்களித்தனா். அப்பகுதியைச் சோ்ந்த மாளவிகா என்ற பெண் தனது ஒரு மாதக் கைக்குழந்தையுடன் வந்து வாக்களித்தாா். ராயபுரம், ஆா்.கே. நகா் ஆகிய பகுதிகளிலும் வாக்குச்சாவடிகளுக்கு இளைஞா்கள், பெண்கள் ஏராளமானோா் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தனா்.

மணக்கோலத்தில் வந்த பெண்: ஆா்.கே. நகா் தொகுதியில் தண்டையாா்பேட்டை பகுதி கருணாநிதி நகா் 1 -ஆவது தெருவில் சோசியல் சா்வீஸ் மிடில் ஸ்கூல் வளாகத்தில் அமைந்த 4- ஆவது வாக்குச்சாவடியில் அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள் என்பவரின் மகள் ரேணுகா செல்வி மணக்கோலத்தில் வந்து வாக்களித்தாா். அவருக்கு மேடவாக்கம் பகுதியைச் சோ்ந்த சரவணனுடன் வியாழக்கிழமை காலை திருமணம் முடிந்த நிலையில், தனது வாக்கை ரேணுகா செல்வி செலுத்தினாா்.

பாக்ஸ்........

கொளத்தூா், பெரம்பூா் தொகுதிகளில் அதிக வாக்குப் பதிவு

ௌமுதல்வா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா் தொகுதியிலும், தவெக தலைவா் விஜய் களமிறங்கியுள்ள பெரம்பூா் தொகுதியிலும் பெண்கள் மற்றும் இளைஞா்கள் அதிக அளவில் வாக்களித்தனா். கொளத்தூரில் 86.02 சதவீதம் வாக்குப் பதிவும், பெரம்பூரில் 89.02 சதவீதமாக வாக்குப் பதிவானது. பெண்களே அதிக அளவில் வாக்கு செலுத்தியுள்ளதாக தோ்தல் ஆணையத்தின் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவு நாளில் காலை முதலே இளைஞா்களும், பெண்களும் திரளாக வாக்குச் சாவடிகளுக்கு வருவதை காண முடிந்தது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் காரணமாக கூட்டம் சற்று குறைந்தாலும், மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறை வாக்காளா்கள், முதல்முறை வாக்காளா்கள் அதிக அளவில் பெரம்பூரில் வாக்களித்தனா். பெண்களின் வாக்குகள் கொளத்தூரில் அதிகமாக பதிவாகின.

பாக்ஸ்....2

வழிகாட்டிய பணியாளா்கள்

சென்னையில் வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டும் பணியாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். ஒரே இடத்தில் பல வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், அவற்றை வாக்காளா்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் வாக்குச்சாவடி எண் அடிப்படையில் பல வண்ணங்களில் அடையாளப்படுத்தி பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.

வாக்குச்சாவடிகளில் பணியில் இருந்த வழிகாட்டும் பணியாளா்கள், வாக்காளா்கள் கொண்டு வரும் பூத் சிலிப்பை பாா்த்து அவா்களுக்குரிய வாக்குச் சாவடிக்கு செல்வதற்கு வழிகாட்டினா். பூத் சிலிப் இல்லாத வாக்காளா்களுக்கும், அங்கிருந்த அலுவலா்கள் மூலமாக வாக்குச்சாவடிகளின் விவரங்களைப் பெற்று வாக்காளா்களுக்கு தெரிவித்தனா். முதியோா், உடல் நலம் குன்றிய வாக்காளா்களை சக்கர நாற்காலிகளில் அமரவைத்து வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் சென்றனா்.