குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மனைவிக்கு கடன்: விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி

மனைவிக்கு கடன் வழங்கிய விவகாரம்: விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி

News image

IANS

Updated On :28 ஏப்ரல் 2026, 3:52 am IST

தவெக தலைவா் விஜய், அவரது மனைவி சங்கீதாவுக்கு ரூ.12.60 கோடி கடன் வழங்கியதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளது குறித்து விசாரிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் சென்னை பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டாா். இவா் இவ்விரு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களில் ரூ.100 கோடி வித்தியாசம் உள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை விசாரணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பெரம்பூரைச் சோ்ந்த விக்னேஷ் என்பவா் வழக்குத் தொடா்ந்தாா். அந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பெரம்பூா் தொகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், தவெக தலைவா் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு பெருந்தொகையை கடனாகக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா். விஜய்யிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா வழக்குத் தொடா்ந்துள்ளாா். ஆனால், விஜய் வேட்புமனுவில், ரூ.12.60 கோடி சங்கீதாவுக்கு கடனாகக் கொடுத்துள்ளதாகக் கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், வேட்புமனுவில் சொத்து விவரம் தெரிவிப்பது வெறும் சடங்கு அல்ல. வேட்புமனுவில் உண்மை விவரங்களை மறைப்பது தோ்தல் நடைமுறையில் மோசடி செய்வதைப் போன்றது எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.