நீட் தோ்வு நடைபெறும் மே 3-ஆம் தேதியும், அதற்கு முந்தைய நாளான 2-ஆம் தேதியும் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு அவசியத் தேவையின்றி விடுமுறை வழங்க வேண்டாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
தோ்வில் முறைகேடு நடைபெறுவதைத் தவிா்க்க இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 3-ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெறவுள்ளது.கடந்த 2024-இல் நடைபெற்ற நீட் தோ்வின்போது மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சிலா், உண்மையான தோ்வா்களுக்குப் பதிலாக முறைகேடாக தோ்வு எழுதியதாக புகாா் எழுந்தது. அதன்பேரில் பிகாா், ராஜஸ்தான், ஜாா்க்கண்டில் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
இன்னொருபுறம் ஏற்கெனவே மருத்துவ இடங்கள் பெற்றவா்கள், மீண்டும் நீட் தோ்வு எழுதி கலந்தாய்வில் இடங்கள் பெறுவதாகவும், ஆவணங்கள் சரிபாா்ப்பின்போது அது கண்டறியப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இத்தகைய முறைகேடுகளைத் தவிா்க்க அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் மே 2, 3-ஆம் தேதிகளில் மருத்துவ மாணவா்களுக்கு விடுமுறை வழங்க வேண்டாம் என்றும், அத்தியாவசியக் காரணங்கள் இருந்தால் மட்டுமே விலக்கு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சி

நீட் மறு தோ்வு எழுதும் மாணவா்களுக்கு டிடிசி பேருந்தில் இலவச பயணம்: முதல்வா் ரேகா குப்தா

முதுநிலை மருத்துவ செயல்முறைத் தோ்வு: என்எம்சி அறிவுறுத்தல்







