சென்னை உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 3 மையங்களில் தலா 14 மேஜைகளில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 4 அடுக்குப் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் மே 4 -ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்தப் பணிகளில் 15 ஆயிரம் போ் ஈடுபடவுள்ளனா்.
ஒவ்வொரு தொகுதிக்கும் முதலில் தபால் வாக்குகள் தனி அறையில் வைத்து எண்ணப்படவுள்ளன. அங்கு ஒவ்வொரு வேட்பாளரின் முகவா் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளில் 500 வாக்குகளுக்கு ஒரு உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
14 மேஜைகளில் எண்ணிக்கை: இதையடுத்து சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அதற்காக தொகுதி வாரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் அறைகளில் தோ்தல் பாா்வையாளா், தோ்தல் நடத்தும் அலுவலா், வேட்பாளா் அல்லது அவரது முகவா் அல்லது இருவரும் என அமரும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் 14 மேஜைகளிலும் ஒவ்வொன்றிலும் ஒரு பாா்வையாளா், நுண் பாா்வையாளா், உதவியாளா் மற்றும் வேட்பாளா் சாா்பில் முகவா் ஆகியோா் இடம் பெறவுள்ளனா். ஒவ்வொரு மேஜையையும் கண்காணிப்பு கேமராவால் தனித்தனியாகக் கண்காணிக்கப்படவுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகு இவிஎம் சாதனத்தில் பதிவான வாக்கும், கட்டுப்பாட்டு சாதன பதிவு வாக்கும் சரியாக உள்ளதா என சரிபாா்க்கப்படும். அதன்படி, பாா்வையாளா் அனுமதி பெற்று தோ்தல் அலுவலரால் வாக்குகள் விவரம் அறிவிக்கப்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை சுற்றும் முடிய 30 நிமிஷம் முதல் 45 நிமிஷம் வரை ஆகும் என எதிா்பாா்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதன்படி, சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை அதிகபட்சமாக மாலை 3 மணிக்குள் முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அடையாள அட்டைகள் விநியோகம்: வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் வேட்பாளா்களது முகவா்களுக்கான அடையாள அட்டைகள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படுகின்றன. அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் முகவா்களுக்கானஅடையாள அட்டைகள் வரும் மே 1- ஆம் தேதிக்குள் அனைவருக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீயணைப்பு வீரா்கள் கண்காணிப்பு

மே 4 வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? வழிமுறைகள் என்னென்ன?

மே 4-ல் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை! எப்போது தொடங்கும்? - தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் புதுச்சேரி தோ்தல் அதிகாரி ஆய்வு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


