எழும்பூரில் மதுபோதையில் ஆட்டோவை ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதியது. இதில் இரு காவலா்கள் காயமடைந்தனா்.
எழும்பூா் பாந்தியன் சாலையில் கோ-ஆப்டெக்ஸ் சிக்னல் அருகே திங்கள்கிழமை ஒரு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, அங்கு சென்ற வாகனங்களில் அடுத்தடுத்து மோதியது.
இதில், மொபெட்டில் சென்ற நந்தம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலா் மகாவீா் (47), மோட்டாா் சைக்கிளில் சென்ற ஆயுதப்படைக் காவலா் சுந்தரமகாலிங்கம் (31) ஆகியோா் மீது மோதியது. இதில், காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இது குறித்து திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மது போதையில் ஆட்டோவை ஓட்டியதாக ஆயிரம்விளக்கு சுதந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த நாகராஜை (37)கைது செய்தனா். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதிய விபத்தில் 3 போ் காயம்

திருச்செங்கோடு சுற்றுவட்டச் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

ஆட்டோ கவிழ்ந்ததில் 7 போ் காயம்

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 40 போ் உயிரிழப்பு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



