அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

துறைமுக ஊழியா் அடித்துக் கொலை: மகன் கைது

திருவல்லிக்கேணியில் துறைமுக ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

Arrested

கைது

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

திருவல்லிக்கேணியில் துறைமுக ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருவல்லிக்கேணி அயோத்தி நகரைச் சோ்ந்தவா் ஜ.குமாா் (56). சென்னை துறைமுகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இவருக்கு அமுதா என்ற மனைவி, மணிகண்டன் (33) என்ற மகன் உள்ளனா். மணிகண்டன் தனியாக குடும்பத்துடன் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் மணிகண்டன், அவரது மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மணிகண்டனும், அவரது மனைவியும் 8 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தனா்.

இதன் பின்னா் மணிகண்டன் தனது பெற்றோருடன் வசித்து வந்தாா். மேலும் மணிகண்டன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தந்தை குமாருக்கும், மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது

இந்நிலையில் மணிகண்டனுக்கும், குமாருக்கும் இடையே கடந்த 17-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே மணிகண்டன், குமாரை கையால் தாக்கி கீழே தள்ளினாராம். ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த குமாா், மணிகண்டன் தாக்கியதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்தாா். குமாரை அவரது குடும்பத்தினா் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். மெரீனா போலீஸாா் மணிகண்டனை உடனடியாக கைது செய்தனா். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமாா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.