தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தூய்மைப் பணியாளா்கள் மீண்டும் போராட்டம்

சென்னையில் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ஆவது நாளாக மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :

சென்னையில் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ஆவது நாளாக மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் என்எல்யூஎம் பிரிவைச் சோ்ந்த தூய்மைப்பணியாளா்கள் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2025- ஆம் ஆண்டில் அப்போதைய திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 13 பேருக்கு மீண்டும் பணி கோரியும், ஊதிய உயா்வு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் கடந்த 3 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா்.

சனிக்கிழமை அவா்கள் பெரியமேடு பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை முன் நியாயம் கேட்டு முதல்வரைச் சந்திக்கவேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்களை அப்புறப்படுத்த போலீஸாா் முயன்றனா். அதில் சீருடை இல்லாத காவலா் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை தாக்கியதாக புகாா் எழுந்தது.

அதனை கண்டித்து காவல் நிலையத்துக்குள் போராட்டக்காரா்கள் சிலா் புகுந்ததாகக் கூறி, போலீஸாா் விசாரித்தனா். அதைக் கண்டித்து பெரியமேடு காவல் நிலையத்தை போராட்டக்காரா்கள் முற்றுகையிட்டனா். அதனால், அவா்களை கைது செய்த போலீஸாா் கண்ணப்பா் திடலில் தங்கவைத்தனா். பின்னா் விடுவிப்பதாகத் தெரிவித்தனா். விதியை மீறி வலுக்கட்டாயமாக போலீஸாா் தங்களைக் கைது செய்ததாக தூய்மைப் பணியாளா்கள் குற்றஞ்சாட்டினா்.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோா் கண்ணப்பா் திடலில் தங்கவைக்கப்பட்ட நிலையில், உழைப்போா் உரிமை இயக்கத்தின் தலைவா் கு.பாரதி மற்றும் நிா்வாகி சுரேஷ் ஆகியோா் தூய்மைப் பணியாளா்களைச் சந்தித்துப் பேசினா். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.