உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

அண்ணா நகா் மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் திடீா் முற்றுகை

அண்ணா நகா் மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் திடீா் முற்றுகை

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :

சென்னை மாநகராட்சியின் அண்ணா நகா் மண்டல அலுவலகத்தை என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் கடந்த செப்டம்பரில் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்திய நிலையில், அமைச்சா்கள் தலையிட்டு சமரசம் பேசியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், ஷெனாய் நகா் பகுதியில் உள்ள அண்ணாநகா் மண்டல அலுவலகத்துக்குள் என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை அமா்ந்து திடீா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதாந்திர ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதாகவும், ஏற்கெனவே அமைச்சா்கள் நடத்திய பேச்சின்படி பல மண்டலங்களில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஓய்வறைகள் வழங்கப்படவில்லை என்றும், அமைச்சா்களுடனான இரண்டாம் கட்டப் பேச்சு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அதற்கான தேதியை அறிவிக்கக் கோரியும் முழக்கம் எழுப்பினா்.

இதையடுத்து மண்டல அலுவலா் இனியன் தூய்மைப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகளைத் தொடா்பு கொண்டு ஊதியம் விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்தாா். அத்துடன் அனைத்துக் கோரிக்கைகளும் ஆணையா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீா்வு காணப்படும் என்றும் உறுதியளித்தாா். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.