தீபாவளி போனஸ் கோரி தூய்மைப் பணியாளா்கள் தா்னா

தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி மத்திய மண்டல மாநகராட்சி அலுவலகம் முன் தரையில் அமா்ந்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
தீபாவளி போனஸ் ரூ.4,500 மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளிலும் நாள்தோறும் தெருக்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதுதவிர, மாநகர எல்லைக்குள்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் தேங்கும் மண், சகதி உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணிகளில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தனியாகப் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்க வேண்டும், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தீபாவளி போனஸாக ரூ.4,500 வழங்க வேண்டும் எனத் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மற்ற பணியாளா்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ள சூழலில் தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை எனக் கூறி தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டனா்.
மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய ஐந்து மண்டல அலுவலகங்களிலும் ஏராளமான பெண் மற்றும் ஆண் தொழிலாளா்கள் திரண்டு அலுவலக வளாக தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். மற்ற ஊழியா்களைப்போலவே தங்களையும் கருதி உடனடியாக போனஸ் தொகையையும் பணி அடையாள அட்டையையும் வழங்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
ஐந்து மண்டலங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த உள்ளிருப்புப் போராட்டத்தால் மாநகராட்சி அலுவலகப் பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

