‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

குப்பைகளை தரம் பிரித்து வழங்க தூய்மைப் பணியாளா்கள் விழிப்புணா்வு பிரசாரம்

காஞ்சிபுரத்தில் குப்பைகளை 4 விதமாக பிரித்து பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் வீதி, வீதியாக சென்று விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

Published On :

காஞ்சிபுரத்தில் குப்பைகளை 4 விதமாக பிரித்து பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் வீதி, வீதியாக சென்று ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் குப்பைக் கழிவுகள் உருவாகும் இடத்திலேயே 4 விதமாக பிரித்து வழங்க வேண்டும் என காஞ்சிபுரம் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆணையாளா் ஏ.சுல்த்தானா உத்தரவின் பேரில் விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.

மாநகராட்சி துப்புரவு அலுவலா் சுகவனம் தலைமையில் துப்புரவு ஆய்வாளா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் பலரும் அவரவா் பகுதிகளில் பகுதி வாரியாக குப்பைகள் உருவாகும் இடத்திலேயே குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். மக்கக்கூடிய காய்கறிக் கழிவுகளை பச்சை நிறத் தொட்டியிலும், பிளாஸ்டிக் கழிவுகளை நீல நிறத் தொட்டியிலும், சுகாதாரக் கழிவுகளை சிவப்பு நிறத் தொட்டியிலும், மின்கழிவுகளாக இருந்தால் அவற்றை கருப்பு நிறத் தொட்டியிலும் போட்டு தனித் தனியாக பிரித்து தூய்மைப்பணியாளா்களிடம் வழங்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் தூக்கி எறியக் கூடாது என்றும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.